Menu

Other Tamil stand out posts

Tuesday, 7 November 2017

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 03

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....     chapter 03


கடலின் இரைச்சலும் வெகுவாக குறையத்துடங்கியது.   இதுவரை கரையிலும் கடலிலும் இரைத்தேடிய வெள்ளை கடல் பறவைகளும் காகங்களும் அங்கே மாமரக்கூட்டுகளில்  பசியோடு காத்திருக்கும் தன்  முட்டை காக்கும் பெட்டை பறவைகளுக்கும், குஞ்சுகளுக்கும் மறவாமல் தன் கூம்பிய அலகுகளில் அன்று கிடைத்த இரையை  கொடுக்கவிரைந்தன. கடைசி பறவை கண்ணை விட்டு மறைய இதுவரை இருந்த தன் வெள்ளி   ரேகைகளுடன் வலம் வந்த பஞ்சு மேகங்கள் பலுப்பேற திட்டுகளாக பிரிந்து மறைந்தன. திடீர் கருமை ஊற்றியது போல் எங்கும் இருள் சூழ்ந்தது. தன்னைதவிர வேறொரு உயிர் இல்லை என்பதை உணர்ந்தான். ஆனால் அதில் அவன் கவலை கொள்ள வில்லை.

இந்த தனிமை அவனே தேடிக்கொண்டதுதான். அவனுடைய அழகிய எழில் தோற்றமும் அன்புடன் பழகும் விதமும் என்றும் அவனை சுற்றி அனைவரையும் அன்பு பாராட்டவைத்தது. அவன் தந்தை தான் அவன் பெற்ற பணிவிற்க்கு காரணம். பணத்தை வைத்து மனிதர்களை எடை போடாது அவா் மனதை புரிந்து நடக்க கற்றுகொண்டான். அதுவே இந்த இள வயதிலேயே அவனை வெற்றிப் படிகள் நோக்கி இட்டுச்சென்றது. இளவயதிலேயே அவன் உழைப்புக்கும் திறமைக்குமான இடம் தேடி வீட்டை விட்டு சென்று கடந்த பத்து வருடங்கள் ஓடி விட்டன. கடந்த இந்த நாட்களில் தோல்விகள் சோதனைகளும் இருக்கத்தான் செய்தன. அதிலும் அவன் இளமை காலம் பல காதல் பூக்கள் பூத்த சோலை வனமானாலும் வசந்த காலம் விரைவில் முடிய  அவை உதிர்ந்தும் போயின. அதனால் காதலே கசந்து இனி தன் வாழ்வில் இந்த இயற்கை பெண்ணே போதும் என தனிமையில் ஒரு துறவி போல் தன்னை நிணைத்துக்கொண்டான்.

வானம் எது கடல் எது கரை எது என்று  தெறியாத வகையில் இருள் எங்கும் பரவியது. இந்த பிரை நிலாவும் அதன் மங்கிய ஒளியில் தன் இரவுப் பணியை மனமில்லாமல் , பகல் நேர தூக்கம் எண்ணி கவலையுடன் கண்கள் இமைக்கும் சில நட்சத்திரங்கள் மட்டும்  இல்லை என்றால் தான் கண்கள் விழித்திருக்கிறோமா என்ற சந்தேகம் தோன்றும். தன் கீழே தன்னை தாங்கிய பூமி மெல்ல மறைய புவிஈர்ப்பையும் மீறி விண்ணுலகில் சஞ்சரிப்தைப் போல் உண்ர்ந்தான்.  அந்த  எல்லை இல்லா மகா வெற்ற வெளியில் தானும் இந்த நிலா பெண்ணும் தான்.  அவள் அழகிய வென்பட்டு மேனியில் காதல் கொண்டு அப்போதே அவளை மனைவி என்றும் அவர்களது செல்ல குழந்தைச் செல்வங்களாக இந்த எண்ணற்ற குட்டி நட்சத்திரங்கள் என எண்ணி மனதில் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான்.  பசி கொண்ட தன் மழழைச் செல்வங்கள் வின்மீன்கள், தன் தாய் நிலவை சுற்றிலும் வாய் அசைத்து ஆ காட்ட தன் பால் ஒளியை தாய் பாலாய் அவைகளுக்கு ஊட்டியது நிலா.


to be continued...