Menu

Other Tamil stand out posts

Tuesday, 7 November 2017

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 05

நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....     chapter 05



அந்த படகு அதன் அசைவில் இருந்து சற்று நிதானித்தது. அருகில் இருப்பவர் சற்று மயக்கமுற்ற நிலையில் இருந்த போதும் சுய நிணைவை இழக்க வில்லை. அவன் தூக்க அவன் உதவியை ஏற்று தானும் தடுமாற்றத்துடன் அவன் அருகில் அமா்ந்தார்.  இருளில் அவன் பார்வைக்கு சரிவர ஒன்றும் தெரியாத போதும்  அவன் தூக்கி தன் அருகில் அமரவைத்தது ஒரு பெண்தான் என்பதை அவன் தோளில் இருந்து முழங்கை வரை நீண்ட ஜடை காட்டி கொடுத்தது. அவள் அணிந்து இருந்த ராணுவ தலை தொப்பியை மீறி ஈரத்திலும் காற்றிலும் தன் பின்னல் தளர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்ட ஜடையை தள்ளி விட்டு தலையில் அடிபட்டு விட்டதா என பார்க்க தொப்பியை களற்றினான் . தலையை பிடித்த படி இருந்த அவள் கைகளை நீக்கி நெற்றியை தடவி , அவளுக்கு அடிபடவில்லை வெரும் தலை சுற்றல் தான் என முடிவு செய்தான். அவள் தோளில் ஒரு கைபோட்டு தாங்கிய படி மறுகையால் அவள் கண்ணங்களை லேசாக தட்டி உலுகினான். அவள் விழி திறக்க முயன்றும் திறக்கமுடியாமல் தலையை மெல்ல அசைத்தாள். அவளுக்கு இந்த கடல் பயணம் ஒத்துக்கொள்ள வில்லை அதனால் ஏற்பட்ட மயக்கம் , கரை சென்றால் சரியாகிவிடும் என்று எண்ணி அந்த சிறிய படகை நோட்டம் விட்டான். கைமிண் விளக்கு ஒன்றும் , ஒரு  முதுகில் மாட்டக்கூடிய ராணுவத்தினா் பயண்படுத்தும் பையும், தண்ணீர் பாட்டில் ஒன்றும் அவன் எதிர் உள்ள பலகை யில் இருப்பதை பாா்த்தான். தண்ணீர் பாட்டில் திறந்து அவளுக்கு கொடுக்க ,அவள் வேண்டாம் என மறுப்பது போல் தலை அசைத்தாள். அவளுக்கு கடல் சோர்வு ஏற்பட்டு உமட்டலுடன் தலை சுற்றியது.

தண்ணீரை கொஞ்சம் அவன் குடித்துக்கொண்டான்.  கைமிண்விளக்கை எடுத்தான் . கடல் வழி பயணத்திற்கானதாக இல்லாமல் சாதாரன மின்விளக்கு . அதை அழுத்தி பாா்க்க அது எரிய மறுத்தது. கரைதிரும்ப எண்ணி பக்கவாட்டில் அங்கொன்று இங்கொன்றாக கிடந்த இரு துடுப்புகளையும் இருகைகள் கொண்டு அழுத்தி தள்ளி அலைகளில் திசையில் அந்த படகை கரை நோக்கி செலுத்தினான். அந்த பெண், படகு அலைகளின் மேலேறி பின் கீழ் நோக்கி பாய்ந்ததில் தலை பாரம் தாங்காமல் அவன் தோள்களை கட்டிக்கொண்டாள். கீழ் இறங்கிய படகு , கடல் நீரில் மோதியதால் அலை படகில் பாய்ந்து அவா்கள் இருவர் மீதும் சடார் என மோதியது. அவன் எதிர்பார்த்த தாக்குதல் தான் என்பதால் துடுப்புகளை லாவகமாக ஓட்டி , அடங்கா குதிரை போல் அலைகளில் தாவிய படகை அடக்கினான். கரைதெண்பட அலைகளும்அடங்கின. பின் அவன் துடுப்பு போடாமலேயே கரைக்கு தானாக சென்றது படகு. படகு தரைதட்ட , அவன் உடனே அவளிடம் இருந்து விடுவித்துக்கொண்டு படகில் இருந்து குதித்து அதை கரை மேலேற்றினான்.பின்னர் எழமுடியாமல் இருந்த அவளை தூக்கி கரைமண்ணில் படுக்க வைத்தான்.

to be continued...